×

டெல்லி சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவில்லை எனக்கூறி போலீசார் வழக்குப்பதிவு

டெல்லி: டெல்லி சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவில்லை எனக்கூறி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கூறி டெல்லி மற்றும் அதன் எல்லைகளில் 16வது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. பிரதமர் மோடிக்கு விவசாயிகள் விடுத்த கேடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் போராட்டத்தை பல கட்டங்களாக தீவிரப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ரயில் போக்குவரத்தை முடக்க திட்டமிட்டுள்ள விவசாயிகள் மறியல் போராட்டம் நடத்தும் தேதியை பின்னர் அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர். இதனிடையே டெல்லி ஊராரி நிரன்காரி மைதானத்தில் விவசாயிகள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். அப்போது வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டுமென அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

டெல்லியில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது விவசாயிகளுடன் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளதாக நரேந்திர சிங் தோமர் கூறினார். விவசாயிகள் தங்கள் விலை பொருட்களை தனியாரிடம் விற்பதை கட்டாயப்படுத்தும் எந்த விதியும் இந்த சட்டங்களில் இல்லை என பியூஸ் கோயல் கூறினார். டெல்லி ஹரியானா எல்லையான சிங்குவில் பணியில் இருந்த 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கொரோனா உறுதியானது. இதையடுத்து சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தனிமனித இடைவெளியை மீறியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags : Delhi ,border ,Singh , Farmers, Agricultural Law
× RELATED ஒவ்வொரு நாளும் முக்கியமானது ஜாமீன்...